வான் மெழுகு ஆய்வு – 2
ஆய்வாளர்
கவிராஜ் M.K. வீராராகவன்
திரு நண்பர் வீரராகவன் அவர்கள் அனுபவம்
மிக்க சித்தவைத்தியர். சென்னை அடையாற்றில் உள்ள சென்னை ராஜ்ய இந்திய
வைத்தியர்களின் கூட்டுறவு மருந்து செய்சாலை மண்டியில் (THE MADRAS STATE INDIAN MEDICAL PRACTITIONER’S
CO- OPERATIVE PHARMACY AND STORES LTD. ) சித்த மருத்தவப் பிரிவில் கண்காணிப்பாளராக அலுவல் பார்த்து வருகிறார்.
அதாவது அங்கு செய்யப்படும் சித்த மருந்துகள் அனைத்தும் இவரது மேற்ப்பார்வையிலும்
ஆணையின் படியும் செய்யப்படுகின்றன. அவர் எழுதியுள்ள இவ் ஆராய்ச்சி கட்டுரை
கவனத்தக்க ஒன்றாகும். வான் மெழுகு கூட்டுச் சரக்குகள் சாதரணமாக பதினான்கில்
இருந்து பதினாறு வரை என்றுதான் பொதுவாக சித்தவைத்தியப் பெருமக்களால் கருதப்பட்டு
வந்து உள்ளது. இந்த எண்ணிக்கைகளை ஒட்டியே விவாதங்களும் நடை பெற்ற வண்ணம்
இருக்கின்றன. ஆனால் நண்பரின் இந்த வான் மெழுகு பன்னிரண்டில் இருந்து பதினாறு
வரைக்கும்மாக ஆகி விட்டது.
தக்க
காரணங்களுடன் அரைப்புச் சரக்கு நாத குருதைலம் என்பதை நாத கருதைலம் என்கிறார். அதிலும்
பொருள் பொதிந்துள்ளது. கவனிக்கற் பாலதே “அமுது” வாசக அன்பர்கள் படித்து பயன் பெற
வேண்டும் என்பதோடு அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை எழுதியனுப்புமாறும்
வேண்டுகிறோம். உதவி ஆசிரியார்
பாடல் – 1
விந்து விந்து செந்தூர நாதமொடு
வீரமான சிவகாமியும்
வெள்ளை சிங்கி நட்ச்சத்திரம் பகர்
வீறு மாண்குறி யொ டெட்டுபின்
தொந்தமான முருகன் புரானமொடு
தூப தீப மரி சமனிடை
சுத்தியாவதுடன் பாருபாறு பரி
சுத்தமான கழுவத்திலே
சிந்தைகொண்டு பனிரெண்டு மென்மைபட
சேர்த்தரைத்து விடு தூளதாய்
சீக்கிரத்தி லிடு நாதமாகிவரு
சித்தநாத கருதைலமே
இதில் கூறப்பட்டுள்ள சரக்குகள்
----
1)
விந்து – இரசம்
2)
விந்துசெந்தூரம் – இரசசெந்தூரம்
3)
நாதம் – கெந்தகம்
4)
வீரமான சிவகாமி – கெளரிபாடனம்
5)
வெள்ளை – வெள்ளை பாடனம்
6)
சிங்கி – மிருதார் சிங்கி
7)
நட்சத்திரம் – பூரம்
8)
ஆண்குறி – லிங்கம்
இத்துடன்
எட்டுச் சரக்குகள் பிறகு முருகன் புராணாம் – காந்தம், தூபம் – சாம்பிராணி, தீபம் –
கற்பூரம், அரி – அரிதாரம்.
அரைப்புச்
சரக்கு – முட்டையின் மஞ்சள் கரு தைலமாகிய நாத கருதைலம்.
பாடல் – 2
விந்து விந்து செந்தூர நாதமொடு
வீரமான சிவகாமியும்
வெள்ளை சிங்கி நட்சத்திரம் புகர்
வீறுமாண்குறி யோடு பின்
தொந்தமான முருகன் புராணாமொடு
தூபதீப மரிசமனிடை
சுத்தியாவதுடன் பாரு பாரு பரி
சுத்தமான கழுவத்திலே
சிந்தைகொண்டு பதின்மூன்று மொன்றுபட
சேர்த்தரைத்து விடுதூளதாய்
சீக்கிரத்திலிரு நாதமாகிவரு
சித்தநாத கருதைலமே
கூட்டுச்சரக்குகள் : இரசம், இராச செந்தூரம், கந்தகம், கெளரி , வெள்ளை, மிருதார் சிங்கி,
பூரம், புகர், பூநீறு, லிங்கம், காந்தம், சாம்பிர்ரணி, கற்பூரம், அரிதாரம்.
பாடல் – 3
விந்து வந்து செந்தூர நாதமொடு
வீரமான சிவகாமியும்
வெள்ளை சிங்கி நட்சத்திரம் புகர்
வீருமாண் குறியுயோட பின்
தொந்தமான முருகன் புராணமொடு
துபதீப மரி சமனிடை
சுத்தியாவதுடன் பாருபாரு பரி
சுத்தமான கலுவத்திலே
சிந்தை கொண்டு பதினாலு மென்மைபட
சேர்த்தரைத்து விடு தூளதாய்
சீக்கிரதிலிடு நாதமாகிவரு
சித்தநாத கருதைலமே
கூட்டுச்சரக்குகளின் விபரம் – 1) இரசம், 2)
இராச செந்தூரம், 3) கெந்தகம், 4) கெளரி, 5) வெள்ளை, 6) சிங்கி, 7) பூரம், 8) புகர் – வெள்ளி, 9) லிங்கம், 10) அபின், 11) காந்தம், 12) சாம்பிராணி, 13) கற்பூரம், 14) அரிதாரம் ( ஆண்குறி – லிங்கம்)
பாடல் – 4
விந்து விந்து செந்தூர நாதமொடு
வீரமான சிவகாமியும்
வெள்ளை சிங்கி நட்ச்சத்திரம் புகர்
வீறு மாண்குறி யோடபின்
தொந்தமான முருகன் புரானமொடு
தூபதீப மரி பரி சமன்
சுத்தியாவதுடன் பாருபாரு பரி
சுத்தமான கலுவத்திலே
சிந்தை கொண்டு பதினைந்து மொன்றுபட
சேர்த்தரைத்து விடு தூளதாய்
சீக்கிரத்திலிடு நாதமாகி வரு
சித்த நாதகரு தைலமே
கூட்டுச்சரக்குகள் – 1) இரசம், 2) இரசசெந்தூரம், 3) கெந்தகம், 4) 5) வீரம், 6) அரிதாரம், 7) கெளரி, 8) வெள்ளை, 9) சிங்கி, பூரம், 10) பூநீறு, 11) லிங்கம், அபின், 12) காந்தம், 13) சாம்பிராணி, 14) கற்பூரம், 15) பரி –தங்கம்.
முதல் நான்கு பாட்டுக்களில் கண்டபடி வீரமான சிவகாமி என்ற சொற்களை
இரண்டு சரக்குகளாகப் பிரிப்பது எப்படி? வீரமான என்னுஞ் சொல் ஓர் அடை மொழியே அன்றி
மருந்தைக் குறிப்பிடவில்லை.
ஐந்தாவது பாட்டில் கண்டபடி வீர தார சிவகாமியும்
என்னும் போதும் தாரம் நடுவிலிருந்து பிரிப்பதோடு தாரத்தோடு வீரமும் ஒரு சரக்காக
ஏற்படுகிறது. நோய்களைக் கவனிப் போமானால் வீரமும் தாராமும் தேவைதான் இருந்தாலும்
பாட்டின் அமைப்பும் பதங்களை பிரிக்க வழி
வேண்டாமா ?
அபினி வேதனா சாந்தினியாகவும், சில நோய்களுக்கு
தேவையான தாகவும் இருப்பதால் சேர்த்தும் சேர்க்காமலும் பாட்டில் எழுதப்
பட்டிருக்கிறது.
தொந்தமான எனும் சொல்லின் பின் பகுதியாகிய மான
என்பது நாளடைவில் வாள எனத் திரிந்து விட்டது எனக்கருதுகிறேன். வாளம் பொதுவாக
மலத்தைப் பிரிக்கும் குணத்தை உடையது. அத்துடன் உலோக பாஷனாதிகளை அடக்கியாளும்
குணமும் அதற்கு உண்டு. ஆகவே மெழுகு உடன் வாளத்தைச் சேர்க்காமல் தேவையான போது
மலத்தைக் கழித்துவிட்டு பின் மெழுகைக் கொடுத்தல் நலம்.
சீகிரத்திலிடு என்ற வார்த்தைக்கும் பொருள்
(அர்த்தம்) இருக்கிறது என்பதனை நானே ஒரு முறை கண்டேன். ஆனால் மறுமுறை கான
முடியவில்லை. அதாவது சரக்குகளைத் தனித்தனியே அரைத்து பின் ஒவ்வொன்றாகச் சேர்க்கும்
பொது ஒருவித புகை கிளம்புகிறது. ஆகையால் சீக்க்கிரத்திலிடு என்றார் போலும்!
இவ்வுண்மையக் கண்டவர்கள் நமது அமுது வாயிலாகத் தெரிவித்தால் நலம்.
வான்
மெழுகு தொடர்ச்சி --- கவிராஜ் M.K.வீரராகவன் அவர்களின் பிற் சேர்க்கை –
நமது “
அமுது” VOL – 2, NO – 10 பக்கம் 129ல் “ வான் மெழுகு” என்ற மருந்தில் சேரும் சரக்குகளை ஐந்து விதமாக எழுதி
மற்ற சித்த வைத்தியர்களின் அபிப்பிராயம் தெரிவிக்கச் சொல்லி பல மாதங்களாகியும்
பதில் யாரும் தரவில்லை. ஆதலின் எனது அபிப்பிராயத்தையே மறுபடியும் தெரிவித்துக்
கொள்கிறேன். இதனை ஓட்டியாவது வைத்திய பெருமக்களின் அபிப்பிராயம் கிடைக்கும் என்று
எதிர்பார்க்கிறேன்.
அ)
எனக்குத் தெரிந்த வரையில் 12 சரக்குகளுக்கு குறைவாகவோ 16 சரக்குகளுக்கு அதிகமாகவோ சேர்த்து
செய்வதாகவோ தெரியவில்லை. சொல்லப் பட்டுள்ள வியாதிகளைப் பார்த்தால் 16 சரக்குகள்
சேர்ந்த வான் மெழுகே சிலாக்கியமாகக் காணப்படுகிறது.
ஆ) அரைப்புக்கு
உள்ள தைலத்தை ”சீக்கிரத்திலிட” என்றதால் சரக்குகளை ஒன்று சேர்க்கையில் புகையும்
தன்மை ஏற்படுகின்றது என்பதும் அதை மாற்றவே “சீக்கிரத்திலிடு” எனச் சொன்னதாகவும்
பெறப்படும்.
இ) நமது
சித்த மருத்துவ முறைகள் பாட்டுக்களாகவே அமைந்துள்ளன. இவற்றில் பல ஓலையிலிருந்து
காகிதத்தில் ஏறியுள்ளன தமிழ் வைத்தியத்திற்கு வேண்டிய தமிழறிவு இலாதவர் தமிழ்
வைத்தியம் செய்வதும் கலைவலர்ச்சியைக் கருதாமல் புத்தக வியாபார வளர்ச்சியையே
பெரிதும் பாராட்டியதாலும் அரசாங்க சலுகை, ஒத்துழைப்பு வைத்தியர்களின் விடாமுயற்சிகள்
இல்லாதாதாலும் பிழைகளே நிறைந்த பிரசுர்ங்களாகி அவற்றைக் கையாளும் போது அவரவர்
அறிவுக்கு எட்டியபடி “எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்பது போல்
அவரவர் மனம் போனபடி மருந்துகளைச் செய்து கையாண்டு பிற்கால சந்ததிகளாகிய நம்மை
ஏங்கவிடாமல் அலைய வைத்து விட்டனர். உதரானமாகக் சண்டரசா பர்ப்பம், சாதிலிங்க
பதங்கம் என்ற இரு மருந்துகளையும் கவனித்தால் நன்கு புலப்படும்.
ஆகவே எழுத்தாளர்க்கும் வாசகர்களாகிய
வைத்தியர்களுக்கும் ஓரளவு மொழி அறிவு அவசியம் என்பதை நாம் தெரிந்து கொள்ளாததால்
மருந்து வேலை செய்யவில்லை என்று குறைகூற வேண்டி வருகிறது. உதராணம் இவ் வான் மெழுகு
ஒன்றே போதும் சரக்கு ஒரு இடம் அரைப்புக்கு உரிய தைலம் ஒரு இடம் (சோறு ஒரு இடம்
குழம்பு ஒரு இடம்) அதிலும் பரிபாஷை ஆகவே இத் தொழிலுக்கு முக்கியம் தமிழ் அறிவு பல
நூல் ஆராய்ச்சி, விடாமுயற்சி, சூக்கும புத்தி இவை முக்கியம்.
அடுத்துப் பார்ப்போம் –
யாகோப்பு வைத்தியக் கல்லாடம் – நாதகுரு தைலம்
இதைப்
பார்க்கும் அளவில் பரிபூரணம் – 400 ல் வரும் கந்தகச் சுடர் தைலம் போல் இருக்கிறது. இதில் வரும் நவ நீதம்
என்ற சரக்குக்கு வெண்ணையை நம்மில் பலரும் இன்று வரை உபயோகித்து வருகிறோம். ஆனால்
நவநீதம், பூரணம், பச்சை எனப்பல பெயர்களைக் கொண்ட மற்றொரு சரக்கு இருப்பதாக நூல்
ஆதாரத்துடன் சொல்லலாம். ஆனால் நான் அனுபவித்த பின்பே சொல்ல எண்ணம். இச்சரக்கில்
அனுபவம் உள்ளோர் தெரிவித்தால் ஏற்றுக் கொள்ளலாம். “நாதகரு” என்பதை “நாத குரு”
என்பதாகப் பலர் சொல்லி வருவது சரியல்ல. ஆகவே மருந்து அரைப்புக்கு வேண்டிய தைலம்
நோய்க்கு ஏற்றதாகவே இருத்தல் நலம். தனி சிற்றண்டத் தைலத்தைக் காட்டிலும் நாதம் –
கெந்தி, கரு – சிற்றண்டக் கரு இவ்விரண்டும் சேர்த்து செய்ததைலம் இன்னும் நல்லது
“நாதகரு “ தைலம் இன்னும் விஷேசமாக இருக்கலாம். ஆனால் “பரை நாதம்” , “நவநீதம்” என்ற
சரக்கு தெரிந்து இதனுதவியல் “வான் மெழுகு” செய்து உபயோகித்தால் இன்னும் விஷேசமாக
இருக்கலாம்.
எனது முடிவு –
கெந்தகம் சிற்றண்ட மஞ்சள்
கரு சேர்த்துத் தயாரித்து தைலம் ஒன்றே போதும். இதைத் தனியாக உபயோகித்தாலுமே பல
நோய்கள் நீங்கும் பதினாறு சரக்குகளும் இந்தத் தைலமும் சிறந்தவை. இனியாவது “அமுது”
வாசகர்கள் அவரவர்கள் அபிப்பிராயத்தை அமுது வாயிலாக தெரிவிக்ககும் படி கேட்டுக்
கொள்கிறேன்.
No comments:
Post a Comment