Monday 9 March 2015

அகத்தியர் குழம்பு தொகுப்பு - 5

அகத்தியர் குழம்பு தொகுப்பு – 5

அகத்தியர் குழம்பு –
        இலங்கை யாழ் பாணத்திலிருந்து வெளிவரும் வைத்தியன் மாத இதழில் மலர் – 4, இதழ், 8 ல் சித்த ஆயுள் வேத டாக்டர் கே. கந்தையா DA.M,F.I.A.P, அவர்கள் எழுதிய அகத்தியர் குழம்பு அமுத கலைக்கியானம் ஆயிரத்திருநூறும் என்ற கட்டுரைத் திரட்டு இதுவாகும். அமுது நேயர்கள் பயன் அடையும் வண்ணம் தந்துள்ளோம்.—உதவி ஆசிரியர் – அமுது.
        அகத்தியர் குழம்பில் அகத்தியர் பெருங்குழம்பு  என்று ஒன்றும் அகத்தியர் மகா குழம்பு என்று மற்றொன்றுமாக பாடப் பெற்றிருக்கின்றன. அகத்தியர் மகா குழம்பிப் பற்றியே வைத்தியன்  மலர் – 4 இதழ் -5 ஆசிரியர் விளக்கம் எழுதியது போலும் அகத்தியர் அமுத கலைக்கியானம் த்தில் பாடப் பெற்ற அகத்தியர் குழம்பில் சேரும் சரக்குகளில் வேறு பாடுகள் காணப்படுகின்றன. அமுது கலக்கியானத்தில் காணப்படும் பாடல் வருமாறு –
உண்மையாய் நம்முடைய குழம்பைக்கேளு
உறுதியுள்ள பெருங்காயம் மிந்துப்போடு
தன்மையுள்ள கடுகு ரோகிநியுங் கூட்டித்
தயவான ரசமுடனே காரங் கூட்டித்
நன்மையுள்ள நிருவிடமும் சிலையும் தாரம்
நல்ல கருஞ்சீரகந் திப்பிலியுஞ்சேர்த்து
வன்மையுடன் தொகை பார்க்கப் பத்துமாச்சு
வரிசையுடன் சரியிடையாய் வாங்கிக் கொள்ளே
************
வாங்கியதோர் மருந்துக்கு எடை வாளம்
வளமாக அதுக்கரைதான் பச்சை சேர்த்துப்
பாங்குடனே கல்வத்திலிட்டுக் கொண்டு
பக்குவமா யீராறு சாமமாட்டித்
தீங்கில்லா முப்பூவும் பத்துக்கொன்று
சேர்த்து நீதிரமாகச் சாமாமட்டிச் 
சாங்கமாய் மருந்தரைக்கும் போதில் மைந்தா
தயிருடனே சோறுண்டு தயவாயாட்டே
மூன்றாம் செய்யுளில் எல்லா நோய்க்கும் அனுப்பானம் அறிந்து செய்ய விலகுமெனவும், நான்காம் செய்யுளில் சித்தர்கள் மகாசபை கூடி இம் மருந்தின் மகத்தான குணத்தை அறிந்து அம்மருந்தை அருளிசெய்த அகஸ்திய மகா முனிவருடைய பெயரையே இக் குழம்புக்கு வைத்தார்கள் என்பதுவும். ஐந்தாம் செய்யுளில் “ உயிரான பச்சை தனையறிந்து நம்முடைய குழம்பைப் பண்ணி பரிவான மாநிடர்க்குச் சொல்லியும்” மற்ற செய்யுள்களில் நோய் நிவாரண அனுப்பானங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அகத்தியர் குழம்பை ஒரு பேதி மருந்தாகவும் மூர்ச்சை சன்னி, விஷம், ஆகியவற்றால் கண்ணில் தீட்டுவதற்கு கழிக்க மாகவும் இன்னும் மற்ற ரோகங்களிலும் சிறு சாந்தி ஏற்படுவதை மாத்திரந்தானே கண்டோம் கடும் பேதி மருந்தாகையால் இம் மருந்தை எல்லா ரோகங்களிலும் எந்த நேரத்திலும் கொடுக்க முடியாமல் திண்டாடுவதையுங் கண்டோம். இதில் கண்டறியாத மர்மம் இருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகிறது இதில் பச்சை என்று சொல்லப்படும் இடம் கவனிக்கத்தக்கது.
ஒரு செய்யுளில் வாங்கிய கழஞ்சுக்கு கொப்ப வாளமும் வறுத்துபாதி தாங்கிய பச்சை பாதி என்றும் அமுத கலக்கியானம் செய்யுளில் வாங்கியதோர் மருந்துக்கு இடைதான் வாளமும் வளமாக அதுக் கரைதான் பச்சை சேர்த்து என்றும் தீங்கில்லா முப்புவும் பத்துக் கொன்று என்றும் விசேஷமாக காணப்படுகிறது.முன் சொல்லிய பச்சை என்னும் பதத்திற்கு பின் செய்யுளில் காணும் பச்சை என்னும் பதத்திற்கும் பச்சைக்கும் சிவப்புக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ குருவுக்கும் கருவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ அவ்வளவு வித்தியாசம் புலனாகிறது. வாளமும் வருத்துப்பாதி தாங்கிய  பச்சைபாதி என்னும் தொடருக்கு விளக்கம் கூறுவோரில் சிலர் வாளம் பத்து கழஞ்சாயின் அதில் பாதியை நெய்யில் வருத்தும் மற்ற பாதியை வருக்காமலே பச்சையாகவும் சேர்க்கவும் கூறுகின்றனர். ஒரு சாரார் இம் மருந்தில் சேரும் பத்துச் சரக்குகளில் ஒரு பகுதியை வருத்தும் மறு பகுதியை பச்சையாகவும் சேர்க்கவும் எனக் கொள்கிறார்கள். இதை எவ்விதம் செய்யினும் இம் மருந்தை இருவிதமாயும் செய்து அனுபவத்தில் கண்ட குண வேறு பாடுகளை வெளிப்படுத்தினால் எது நல்ல முறை என்று தீர்மானிக்கலாம். அமுத கலைக்கியானம் இரண்டாம் செய்யுளில் காணும் பச்சை என்பது வேறொரு பொருளைக் குறிக்கின்றது என்பது தெளிவாகிறது.
இந்த மருந்தை தந்தருளிய அகத்திய முனியும் உயிரான பச்சைதனையறிந்து நம்முடைய குழம்பை பண்ணு  என்றும் சொல்லிவிட்டார். ஆகவே இங்கு பச்சை என்பது பிறிதொரு பொருளைக் குறிக்கின்றது. அதனைப் பூரணமாக அறிந்து செய்தால் ஏன் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தால் மாற்ற முடியாது என்று ஒரு அனுபவ சாலியும் கேட்கின்றார். இவ்வனுபவத்தால் தனி அனுபானத்தில் பச்சை, முப்பு நீங்கலாக வாளம் உள்பட்ட பத்தி னொரு சரக்குகளையும் சுத்தி செய்தும் பின் காரசாரத்தில் சுருக்கு கொடுத்தும் காரமேற்றாத தச தீட்சை செய்த பூநீறு,அன்டக்கல் சுண்ணம் (பச்சை) பாதி சேர்த்தும் காரமேற்றிய முப்பு பத்துக்கொன்று சேர்த்தும் மருந்தை பாகம் பண்ணிக் கொடுத்துப் பார்த்ததில் இதற்கு விசேஷ சக்தி உண்டென்பதையும் எல்லா நோய்களுக்கும் நல்ல மருந்தாகா பாவிக்கலாம் எனவும் நம்புகிறோம்.



அகத்தியர் குழம்பு வேறு – கவிராஜ் M.K . வீரராகவன் கருத்து – அமுது வாசகர்களாகிய அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மையத்தில் பழமையானதும் பலரின் தர்க்கத்திற்கு இடம் தருவதுமான அம அகத்தியர் குழம்பை பற்றி அறியாதார் யாருமில்லை. இன்று வரையில் முடிபு ஏற்ப்படாததால் என் அணிபவத்தை சிறிது வெளியிடுகிறேன். அன்பர்கள் அனுபவித்துப் பின் அவரவர் அபிப்பிராயம் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். முதலாவது இவ் அகத்தியரால் செய்யப்பட்டதல்ல ( அமுதகலைகியானம் 1200 ) மாசில்லா மருந்து பத்தும் குற்றம் நீக்கப் பட்ட மருந்துகள் பத்திலும் ஒரு கழஞ்சு வாங்கிய கழஞ்சுக்கு ஒரு வாளமும் மேற்கூறிய பத்துக்கு சமன் வாளம் சேர்க்காமல் முன் எடுக்கப் பட்டபடி வாளமும் கழஞ்சு ஒன்று (சுத்திசெய்து சேர்க்கவும்) தீங்கில்ல மருந்து பத்தும் சேர்த்து அரைக்கக் காந்தும் சரக்குகளை நன்றாகச் தூள் செய்து கொண்டு மோரும் சோறும் உண்டு பின் வாலத்தைத் தனியே அரைத்துச் சேர்க்கவும்
இத்துடன் தாங்கிய பச்சைபாதி
காரான வீரமென்னும் பச்சைஎன்னும்
கதிரென்றும் கன்னியுட நாதமென்னும்
பூநீருக்கு பச்சை என்று பெயர் 
                                   வள்ளுவர் - 16
ஆகவே தசதீச்சை செய்த பூநீரும் மேற்ப்படி எடைகளில் அதாவது கழஞ்சு அரை –
சரக்க்குகள் – பெருங்காயம், கடுகு, இந்துப்பு, ரசம், பொறித்த வெங்காரம், நாபி, மனோசிலை, ஓமம், தாளகம், கருஞ்சீரகம், வாளம், தசாதீட்ச்சை பூநீருக்கு கழஞ்சு அரை (யாவும் முறைப்படி சுத்தி செய்து கொள்ளவும்.) இவ்விதமாக கூட்டி செய்யப்பட மருந்து சொல்லி வரும் நோய்களைக் கூடியவரையில் கண்டிக்கிறது.

                      இப்படிக்கு – கவிராஜ் – எம்.கே. வீரராகவன்               

Monday 2 March 2015

அகத்தியர் குழம்பு தொகுப்பு - 4

அகத்தியர் குழம்பு சிலரின் அனுபவங்கள் –
A ---
        இன்னும் சில சித்த வைத்தியர்கள் – பச்சைபாதி என்பதற்கு 5 பாகம் சித்தாமனக்குப் பருப்பு சேர்த்து அரைத்து உபயோகிகிறார்கள். அதாவது 10 பலம் சரக்குகளுடன் 10 பலம் வறுத்த வாளப்பருப்பு 5 பலம் சித்தாமனக்கு பருப்பும்
B ----
                        இதே முறை அதாவது சித்தாமனக்கு உபயோகிக்கும் சிலர் 10 தில் 5 பலம் வாளப் பருப்பும் வறுத்தும் 5 பலம் சித்தாமனக்குப் பருப்பு பச்சையாகவும் உபயோகிக்கிறார்கள்.
வறுத்துப் பாதி – பச்சை பாதி என்பதற்காக போலும்.

B --- 
        இன்னும் சிலர் கை முறையாக – பின் வருமாறு வறுத்துப் பாதி என்பதற்கு சம்பைச் சரக்குகளை வறுத்துப் பொடித்தும்பச்சை பாதி என்பதற்கு மற்ற ஐந்து சரக்குகளையும் பச்சையாக சேர்ப்பதும் வாளத்தை சுத்தி செய்து வறுக்காமல் சேர்ப்பதும் ஒரு வழக்கம்.
இன்னும் பற்பல சிறு வித்தியாசங்களும் செய்முறையிளுண்டு.

        மேற்கூறிய ஏழு விதமான சரக்கு வித்தியாசம் கைமுறை வித்தியாசங்களைக் கவனிக்குமிடத்து வேறு பாடுகளை நீக்கி ஐயந்திரிபற ஒரே முறை இப் பெரிய மருந்திற்கு இருக்க வேண்டியதென்பது திண்ணம். ஆகவே நாங்கள் கூடி யோசித்து வந்த முடிவு பின் வருமாறு : -

அகத்தியர் மெழுகுக்கு சேரவேண்டிய சரக்குகள் ]-
1.        பெருங்காயம்
2.        கடுகுரோகினி
3.        இந்துப்பு
4.        இரசம்
5.        அரிதாரம்
6.        மனோசிலை
7.        திப்பிலி
8.        கருஞ்சீரகம்
9.        வெங்காரம்
10.     சுக்கு
இவை வகைக்கு, 1 - பலம் , சுத்தி செய்த வாளம் 10 - பலம்
குறிப்பு – இதில் ஓமம், விஷ நாபி நீக்கப்பட்டது.

சாமாதானம் – அ : -
        நம் முடைய ஏடுகளில் முதல் இரண்டையும் கவனிக்கு இடத்து அவ்விரன்டிலுமே சரக்கு வித்தியாசங்கள் இருக்கிறது. ஒன்றில் ஓமம் மற்றொண்டில் ஓமத்திற்குப் பதில் திப்பிலியும் கூறுகின்றன. இவற்றில் ஒன்றுதான் சரி அது எது ? எது சரி என்பதுற்கு அகத்தியர் சீடனாகிய யூகி முனிவர் கூற்று தகுந்த ஆதாரம். அதனால் ஓமத்தை நீக்கி திப்பிலி சேர்க்க வேண்டியது. அது தான் சரி இன்னொரு காரணமும் உண்டு. ஓமம் மற்ற சரக்குகளோடு திப்பிலியைப் போல் இதில் பொருந்தாது
சமாதானம் – ஆ
        அடுத்தபடியாக விடம் என்ற முதல் இரண்டு வாசகங்களிலும் வரும் பதத்திற்கு – சேர்க்கும் மருந்து – விஷநாபியா சுக்கு என்பது இரண்டு காரணங்களால் சுக்குதான், விஷனாபி அல்ல என்பது நிச்சயமாகிறது. ஒன்று நமக்கு அகத்தியர் சீடராகிய யூகி முனியை விட நிச்சயமாக அகத்தியர் பாடல்களுக்கு அர்த்தம் சொல்லக்கூடியவர் வேறுயார் உளர் ? அவர் கைபாகமாக சொல்லுமிடத்து சுக்கு என்பதற்கு பரிபாசை நீக்கி தெளிவாக தமது கைபாகத்தில் சொல்லி விட்டார். அதற்கு மேல் நமக்கு சந்தேகம் வேண்டியது இல்லை.
இரண்டாவதாக –
        முதல் இரண்டு வாசகங்களிலும் விட என்று சொல்லப்பட்டது விஷநாபி என்றும் பலர் அர்த்தம் கொண்டாலும் இந்த இடத்தில் “ விஷ மூடி அமிர்தம் “  என்று பரிபாசையாகச் சொல்லப்படும் சுக்குதான் என்பதை அகத்தியரின் பிரதம சீடனாகிய யூகிமுனி தெளிவாகச் சொன்னதாலும் விடம் என்பது இவ்விடத்தில் சுக்கு என்று பொருள் படுத்துவதுதான் சரியாகத் தோன்றுகிறது.
        இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டியது. நமது சித்த வைத்தியர்களுக்குள் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. அதாவது இரண்டு மருந்துகளில் எது என்று சந்தேகம் வந்த பொழுது பொருத்தங்களை சரியாக கவனியாமல் அதிக காட்டமுள்ளவைகளையே சேர்ப்பது வழக்கம். அந்த முறையில் விடம் என்றவுடன் சுக்கு ஞாபகத்திற்கு வராமல் விஷநாபி வருகிறது போலும் அது விஷயத்தை யூகிமுனியும் அறிந்து விடம் என்று சந்தேகத்தை நீக்கி சுக்கு என்றே தெளிவாக கும்மியில் எழுதிவிட்டார் போலும். அகத்தியர் குழம்பு செய்முறை
        மேற் கூறிய பத்து சரக்குகளையும் பத்துபலம் பச்சையாக அதாவது முறைப்படி சுத்தம் செய்து வருக்காமலும், அடுத்தபாதி பத்துப்பலம் வாளம் இதை வறுத்து கரிநிறமாக வறுத்து  மோர்விட்டரைத்து வழித்து வைத்துக்கொண்டு சில வாரம் கழிந்தபின் உபயோகிக்கவும்.
பச்சை பாதி என்பது பத்து சரக்குகள் பத்துபலம்.
வருத்துப்பாதி என்பது பத்துப்பலம் சுத்தி செய்த வாளம் வறுத்து சேர்க்க வேண்டியது என்பது தான் பொருள் என்பதற்கு யூகி முனிவர் கும்மிதான் சிறந்த ஆதாரம் ஆகும்.

குறிப்பு – அனுப்பானம் உபயோகம்,அளவு அடுத்த வெளியிடப்படும்.



பாடல் --   
அகத்தியர் குழம்பு பாடல்
மருந்து – உபயோக முறை – மற்றும் துணைப் பொருள்களும்

கூட்டிய மருந்தின்பேரு அகத்தியார் குழம்பதாகும்
ஈட்டிய சுரமே சுக்கா மிருமலே கடுக்காய்ச்சாறு
வாட்டிய குளிர் ஜுரங்கள் வகை சுக்கு மிளகுமாகும்
பாட்டியல் ரத்தமூலம் பசுநெய்யின் மேதிப்பாலே.

பாலெனு மொழியே கேளாய் பாண்டொடு வெப்புப்பாவை
மேலு நீராம்பல் சோகை மிளகுதூள் வெள்வெங்காயம்
சாலவே சந்நிக்கெல்லாந் தேனிஞ்சி சாறதாகம்
ஈழமாஞ் சந்நிவாதம் விஷங்கட்குங் கண்ணிற்றீட்டே

இடுகண்ணிற் கடுகிற்பாதி வீங்கு கற்றாழஞ்சோறு
வடிதயிர் சந்தனங்கள் வைத்து நீ கட்டமாறும்
படுபரும் பிளவை வாழை பகரரையாப்பு புண்கள்
உடனுறு சிலந்திக்கெல்லா முமிநீரிற் பூசநன்றே

பூசிடு முலைக்குத்துக்கும் புண்ணுக்குமிதுவேயாகும்
கூசிடு குன்மந் தோன்றிற் கொம்மட்டிக்காயின் சாற்றிற்
பாசமாம் வாய்வுமாம்பல் பலவித குணத்திற் கெல்லாம்
நேசமாம் நொச்சி சுக்கில் நிச்சயஞ் செய்துபாரே

பாராய் கபால வழி முதலாப்பசாசு பறக்குத் திரிபுகையால்
நேராயெடுக்கு நீர்ச்செரிப்பு நீர்க்கல்லடைப்புத் தாலைவிழல்
தீராக்ரந்தி பறங்கிமுதல் தீருங் குப்பிச் சாற்றதனில்
சீராய்க்கடித்த பலவிஷங்கள் தீருந் தீருந்திரிபிடியே  

பிடிக்குஞ் சீலையம் மிதனிற் பிரட்டியுருட்டித் திரியதனை
இடிக்கும் வலிக்கும் தலைவாத மிடரிப்போகும் புகை காட்டின்
குடிக்குங் கியாழங் கொடிவேலி கொடிய கழற்சி முசுமுசுக்கை நொச்சி
அடக்குஞ்சந்நி பதின்மூன்று மனுபானஞ்செய்நூல் விதியே

விதியா மருந்து விதுவல்லால் வேறே தேடவேண்டாங் காண்
பதியாய் நாலாயிரத்து நானூறு பகரும் வியாதிகளுக்கு கெல்லாம்
மதியால் வியாதிக் குறிப்பித்து வகையாயனு பானத்தன்னில்
துதியா மருந்து பணவேடைதான் சொன்னோம் பத்தியநீகாரே

காரேயாவின் நெய்சொன்னேன் கரிதான் முருங்கை வாழைப்பிஞ்சு
பாரின் முளைத்த நார்த்தங்காய் படர்ந்து காய்க்குந் தூதுவளை
சேருங் கறிகனி வையெல்லாம் செய்து பிழைகள் பண்ணாமல்
வாரம் பெருத்த பொதிகைமலை வளருமுனிவர் சொன்னாரே.

சொன்னார்மடவார் தங்கட்குச் சுகமாய்க் கர்ப்பம் வரும்படி கேள்
மின்னேயரசின் கொழுந்ததனை மிகவாவின் பால் விட்டரைத்து
முன்னோர்குழம்பு பணவேடைதான் மூட்டு மூன்றுநாள் கொள்ள
பொன்னே புதல்வருண்டாவர் புவியோர்க்குறுதி கண்டீரே

கண்டீர்நாவற்பட்டைதனைக் கருத்தவாட்டின் பாலதனில்
கொண்டே கூட்டிக் குலைத்துப் பணவெடை தான் கொண்டால்
பண்டோர் சூதக வாய்வுடனே பருத்த கர்ப்ப வாதமும்போம்
வண்டார் குழல்சேர் மடமானே மலைசேர் முனிவர் வகுத்ததுவே

வகுத்த பிரமனுரையாலே வருகுஞ் சூசிகவாய்வுடனே
மிகுந்த திரட்சி வலிதீரும் மிளகுஞ்சுக்கும் பாகமதில்
தொகுத்த குழம்பு பணவெடைதான் துநிவாய்க் கொள்வீர் சுகமாகும்
திகைத்த பிரமிசொகமது தீருங் கற்கண்டிநிர் கொள்ளே

குறிப்பு –
        அகத்தியர் குழம்பு எவ்வளவு காலம் பழமை ஆகிறதோ அவ்வளவு நன்மையான குணங்களை செய்யவல்லது. அதன் கெட்டத்தனமைகள் வாந்தி, குமட்டல் அதிக உஷ்ணம், வயிற்றில் வலி அதிகப்படியாக பேதியாகுதல் முதலிய கெட்ட குணங்கள் நீங்கிவிடும். இது வருடக்கணக்கான பழகிய மருந்திற்கு ஏற்படுவது இல்லை.
        பெண்களின் மாதவிடாய்காலவலி  வயிற்றில் கட்டி போல் பிரண்டு வந்து அதிக ரத்தம் ஏற்படுதல்
முதலிய வைகளுக்கு மாதவிடாய் காலம் தவிர்த்து குளித்த பிறகு மூன்று நாளுக்கு ஒரு முறை பிரயோகம் செய்தால் சூதக வாயு நீங்கி நன்மையான குணத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் குலைக்கட்டி, மாந்தம், கப சுரம் கணை பெருவயிறு, பித்த பாண்டு, காமாலை சோகை மகோதரம் வரையுள்ள வியாதிகள் அனுப்பான மாற்றங்களின் படி முதலில் இதைக் கொடுத்து பின்பு அந்தந்த வியாதிக்கு உள்ள மருந்துகளைக் கொடுத்துவர விரைவில் குணத்தை ஏற்படுத்தும்.
        சன்னி பதிமூன்றுக்கும், முதலில் அதற்கு உரிய அனுப்பானங்களோடு திரி, புகை, கலிக்கம் உல் பிரயோகம் என்று நிலைமைக்குத் தகுந்தபடி செய்வதால் சீக்கிரமாகவே குணத்தை ஏற்படுத்தும்.
        நிமோனியா என்ற கபசுரத்தில், மனதார காசம் கடுமையான மூச்சு திணறல் நெஞ்சில்கனம் தலை தூக்க முடியாத நிலை வேர்வை அதிகமாகுதல், சீதளம் அடைதல் முதலிய தருணங்களில் நிச்சயமான சீக்கிரமாகவே நல்ல குணத்தை செய்கிறது ஆராதரனங்கள், பிளவை, புற்று நோய் நீர் என்றும் வற்றாத மேக ரணங்கள் வண்டுகடி பத்து மேகப் படை இவைகளுக்கு சிறிதளவு மெழுகை என்னை வெண்ணை முதலியவைகளில் கலந்து மர்ம ஸ்தானங்களைத் தவிர்த்து பாக்கி சரீரத்தில் போட்டுவர நல்ல நிச்சயமான குணத்தை ஏற்ப்படுத்தும்.
விஷகடிகளுக்கு நல்ல பலனை நம்பிக்கையாக செய்து கொண்டுவருகிறது. பொதுவாக தகுந்த சமயோசித புத்தியும் திடமான தீர்மானத்தோடு சரியான அளவில் அதனதன் அனுப்பானம் அறிந்து பிரயோகம் செய்வதில் அளவற்ற நம்பிக்கையான சஞ்சீவியாக விளங்குகிறது.

குறிப்பு –
மேற்கண்ட அனுபவங்கள் மற்றும் கீழ்க்கண்டவைகளும் சி.வை. ஹரிகரன் என்பவரால் எழுதப்பட்டது.
அகத்தியர் குழம்பு – அனுப்பானம் தீருவியாதிகள்
சுக பேதிக்கு – பனை வெல்லம்

சன்னி,வாதசுரம், அண்டவாதம், வாயு, மூலவாயு,ரோகம் 64 – இஞ்சி சுரசம், சுக்கு கசாயம், தேன்
பித்தசுரம் – கடுக்காய் கசாயம், கொத்தமல்லிக் கசாயம்

இருமல் – கடுக்காய்

சிலேத்தும சுரம் – திப்பிலிக் கசாயம்
பேதிசுரம் – கிராம்பு, மலைதாங்கிவேர், சேர்ந்த கசாயம்
குளிர் சுரம் – சுக்கு, மிளகு கியாழம், இஞ்ஜி சுரசத்தில்
வாதசுரம் – நொச்சிச் சாற்றில்
அசாத்திய சுரம் – சாதிக்காய் பொடியில்
இரத்த மூலம், பாண்டு – ஆவின் நெய்
மகோதரம், பெருவயிறு நீராமை – மிளகுத்தூள், வெள்ளுள்ளி இஞ்சி சுரசத்தில்
குண்மம் – தும்மட்டிக்காய் சாற்றில்
வாய்வுக்கு – சுக்கு, நொச்சி சேர்ந்த கியாழம்
நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, கல்லடைப்பு – சங்கங்குப்பிச் சாறு அல்லது மிளகு பொரித்தது பொரிகாரம் – கற்கண்டு பொடித்து நெய்யில் அல்லது இளநீரில்
சன்னி 18 க்கும் – வெள்ளுள்ளி தைலம், அல்லது வெள்ளுள்ளி கழற்சி முசுமுசுக்கை சேர்ந்த கியாழம்.
கர்பாசய ரோகம் – அரசாங் கொழுந்தை ஆவின் பாலில் அரைத்து மூன்று நாள் மூன்று வேலை காலையில் கொடுத்துவரவும்.
சூதகவாய்வு, வாய்வுக்கட்டி – நாவல் பட்டை வெளாட்டுப் பாலில் இடித்துப் பிழிந்தத சாற்றில் சீரகத்தூள் அல்லது நொச்சிவேர் சுக்கு மிளகு சேர்ந்த கியாலத்தில்
திரளாத பெண்களுக்கு – செம்மறியாட்டுப் பால் அல்லது சாம்பிரானித் தைலத்தில்
உட்குத்து, புறவீச்சுக்கு – இஞ்சி, வெள்ளுள்ளி முருங்கைப்பட்டை, இருக்கம் வேர் இவற்றை தட்டிப் பிழிந்த சுரசத்தில்
நெஞ்சுவலி – பனைவெல்லம், சித்தர மூலம், குப்பை மேனியில் மத்தித்து தேனில் கொடுக்கவும்.
விரியன் பாம்பு கடி – தாளி, அவுரி, வெண்ணை அரைத்து கொட்டைப் பாக்களவில்
நல்ல பாம்பு கடி – நாவல் கொழுந்து மிளகு வெற்றிலை இவற்றை அரைத்து கொட்டைப் பாக்களவில்
தேள்கடி ஈருள்ளிச் சாற்றில் கொடுத்து கடிவாயில் தடவவும்
பல விஷங்களுக்கு – வெற்றிலைச் சாற்றில்
வீக்கம், விஷபாக வீக்கம் – நொச்சியிலைச் சுரசத்தில் திரிகடுகு பொடி தூவிக் கொடுக்கவும்.
வாந்தி – காடியில்
கெற்ப விப்புருதிக்கு – பசும்பால், வெள்ளாட்டுப்பால்
மகோதரம் – அகத்தியிலைச் சாறு
பித்தம்—ஆவின் பால்
சீதபேதி – வெள்ளாட்டுத் தயிர்
சூலை கிரந்தி – பனை வெல்லம்
பித்தவெட்டை – விலாமிச்சம்வேர் கியாழம்
மூலம் பதினைந்துக்கும் – நெய்
மேகவெட்டை கிரந்தி பரங்கிப் புண் – சங்கங்குப்பிச் சாற்றில்
வெளிப் பிரயோகம்----
ஆராத இரணம் புரையோடும் புண்களுக்கு நல்லெண்ணையில் அல்லது வேப்பம் எண்ணையில் குழைத்துப் பூசவும்.
சிலந்தி, அரையாப்பு, பிளவை, முலைக்குத்து, தலையிடி --- இவைகளுக்கு உமிழ் நீர் அல்லது தேனில் கலந்து போடவும். அல்லது நெறிகளில் பூசவும்.
தண்ணீரில் மூழ்கி மூர்ச்சையானவர்களுக்கு --- கடுகளவு எடுத்து தாய்ப்பாலில் குழைத்து கண்ணுக்கு கலிக்கம் இடவும்.
சன்னி – வேப்பெண்ணெய், சுக்கு கியாழம் இவற்றில் எள்ளு அளவு கலிக்கம் இடவும்.
குறிப்பு – கண்ணில் கலிக்கம் இட்டால் சிலருக்கு வேதனை வீக்கம் உண்டாகும். அவ்விதம் இருந்தால் சுடுசோறும் தயிரும் சந்தனமும் மத்தித்து கண்ணிற் கட்ட நீங்கும். கற்றாழைச் சோறும் தடவிக் கட்டலாம்.
பேதியதிகரித்தால் வசம்பு சுட்டகரி எலுமிச்சம் பழச்சாறு அல்லது புளித்த மோர் இவற்றை உள்ளுக்கு கொடுக்கவும்.
இந்தக் குழம்பு தனிக் கொடுத்தே வாய்வு இன்பமாய் நீங்கிச் சரீரந்தன்னில் சிந்தையாக அயகற்பம் உண்டிட காயம் நிலைக்கும் என்றார் – யூகிமுனி
பத்தியம் – பசுநெய், முருங்கை, வாழை பிஞ்சு, நாரத்தங்காய் தூதுவேளை இவை நன்மை பயக்கும் அளவு – குன்றிமணி,மிளகு